கொழும்பில் முக்கிய வீதி ஒன்றிற்கு பூட்டு! மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

#SriLanka #Colombo #Department #Road #Train
Mayoorikka
2 years ago
கொழும்பில் முக்கிய வீதி ஒன்றிற்கு பூட்டு! மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உடைந்த நிலையில் காணப்படும் மேம்பாலத்தை அகற்றும் பணிக் ஞாயிற்றுக்கிழமை (05) முதல் ஆரம்பமாகியுள்ளது.

 இந்நிலையில், மெரைன் ட்ரைவ் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 இதேவேளை, வெள்ளவத்தையிலிருந்து மரைன் டிரைவ் வழியாக கொள்ளுப்பிட்டி செல்லும் வாகனங்கள் பம்பலப்பிட்டி புகையிரத நிலைய வீதியால் காலி வீதி வழியாக சென்று கொள்ளுப்பிட்டி நோக்கி செல்ல முடியும்.

 அத்துடன் மரைன் டிரைவால் கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் க்ளென் ஆர்பர் பிளேஸால் திரும்பி, காலி வீதியில் பிரவேசித்து பின்னர் டூப்ளிகேஷன் வீதியால் வெள்ளவத்தைக்கு செல்ல முடியுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!