ஜெர்மனி விமான நிலையத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்மநபர்

#Arrest #Airport #world_news #GunShoot #Germany #Passenger
Prasu
1 year ago
ஜெர்மனி விமான நிலையத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்மநபர்

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், வானை நோக்கி 2 முறை சுட்டார். 

பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாகச் சென்றனர். விசாரணையில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

 துப்பாக்கிச்சூடு நடத்தும்முன் அவருடைய மனைவி போலீசை தொடர்பு கொண்டு, அந்த நபர் 2 குழந்தைகளையும் கடத்திக்கொண்டு செல்கிறார் என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!