இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை தயாரிப்பதற்காக இரத்தம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!
இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை தயாரிப்பதற்காக தேசிய இரத்த மையத்தில் இருந்து இரத்தம் பெறப்பட்டதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கல்வியியல் ஆய்வு நடத்துவதற்கான அனுமதியின் மூலம் உரிய இரத்தம் பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகள் தயாரிப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகளில் தாமதம் ஏற்படுவது பிரச்சினைக்குரியது எனவும், மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்த தற்போதைய சுகாதார அமைச்சருக்கு தனது ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் .ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.