மன்னாரில் 02 கிலோவுக்கும் அதிக தங்கத்துடன் ஐவர் கைது!
#SriLanka
#Mannar
#Arrest
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் சந்தேகநபர்கள் குழுவொன்று கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே மேற்படி 05 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து டிங்கி படகு, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் 28 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும், மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.