ஹரக் கட்டா 700 மில்லியன் ரூபாவை வழங்க முயற்சித்தார் : திரான் அலஸ்!
ஹரக் கட்டா தம்மை இலங்கைக்கு அழைத்து வர வேண்டாம் எனக் கூறி 700 மில்லியன் ரூபாவை வழங்க முயற்சித்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
காலி உனவடுன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாண பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள், அரச அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் காலி உனவடுன பிரதேசத்தில் நேற்று (04.11) சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மேலும் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், "700 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்துஇங்கு கொண்டு வராமல் துபாய்க்கு அனுப்பச் சொன்னார்கள். அந்த மக்கள் நிறைய பணம் செலவழிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் நாம் அதற்கு அடிபணியக்கூடாது.
தென் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் பல தடவைகள் கலந்துரையாடல்களை நடத்தி என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்கள். பணியை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள்.
இதேவேளை, சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை அதிகாரிகள் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதால் பொலிஸ் திணைக்களம் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.