கெர்சன் நகர் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு
#Death
#Attack
#Russia
#Missile
#Ukraine
#War
#Rescue
Prasu
2 years ago
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.
இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலை வாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.
இதில் 6 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.