மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர் : சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

#SriLanka #Sajith Premadasa #government #Electricity Bill #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Public #Politician #Samagi_Jana_Balawegaya #Vat
Thamilini
2 years ago
மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர் : சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்திய சில நாட்களில் VAT வரியை 18% ஆக உயர்த்தியுள்ள நிலையில்,  மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அதேநேரம்  VAT வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.  VATக்கு பதிலாக, தற்போதைய வரி வசூல் முறை அல்லது வரி நிர்வாகமானது மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

 வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் மக்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் சில நட்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற வரிச்சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 

இந்த முறைகளின் மூலம் அரசு  எதிர்பார்க்கும் வரி வருமானம் சாமானிய மக்கள் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!