யாழில் வீதியில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் வீதியில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

யாழில் வைத்தியசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர்கரவெட்டி, அரசடிச் சந்திப் பகுதியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். 

தோட்டத்துவளவு, வதிரியை சேர்ந்த நாகரத்தினம் இரவீந்திரன் (வயது- 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

குறித்த நபர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை (02.11) நண்பகல் 11.30 மணியளவில் கரவெட்டி, அம்பம் வைத்தியசாலைக்கு துவிச்சகர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது வீதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

 குறித்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!