ஆறு மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட தினேஸ் ஷாப்டரின் சடலம்!

#SriLanka #Court Order #Investigation
PriyaRam
2 years ago
ஆறு மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட தினேஸ் ஷாப்டரின் சடலம்!

சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் குறித்த சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி தடயவியல் நிபுணர் மருந்து வாரியம் முன்பாக மீண்டும் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

images/content-image/2023/10/1699098367.jpg

வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தமேற்பட்டதன் காரணமாக மரணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பின்னர், தினேஷ் ஷப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!