ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை!
#SriLanka
#Death
#Israel
#Gaza
PriyaRam
2 years ago
இஸ்ரேலில் பணியாற்றி வந்த சந்தர்ப்பத்தில் ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை பிரஜையான சுஜித் பண்டார யடவரவின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவரும் பேச்சாளருமான காமினி செனரத் யாப்பா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அரசாங்கத்தினால், வழங்கப்படும் சகல இழப்பீட்டு கொடுப்பனவுகளும் சுஜித் பண்டார யடவரவின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவரும் பேச்சாளருமான காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.