ஹமாஸுடன் தொடர்புடைய பக்கங்களுக்கு தடை விதித்த டெலிகிராம்
#world_news
#Israel
#War
#Telegram
#Ban
#Account
#Hamas
Prasu
2 years ago
ஹமாஸுடன் இணைந்த பல சேனல்களுக்கு டெலிகிராம் அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸ்ஸாம் படையணி மற்றும் காசா நவ் செய்தி கணக்கு ஆகியவையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வாரம் முதல் கூகுள் பிளே அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம் பதிப்புகளுக்கு இந்தக் கணக்குகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.