இலங்கை அணியின் படு தோல்வி - விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள வலியுறுத்தல்!
#SriLanka
#Srilanka Cricket
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவும், தேர்வு குழுவும் ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோல்விக்கான பொறுப்பை, வீரர்களை விடவும், அதிகாரிகளே ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழு மற்றும் தேர்வு குழுவிற்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமது பதவிகளிலிருந்து அவர்களே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.