இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.