இலங்கை இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தொடர்பில் தென் கொரியாவின் வாக்குறுதி!
#SriLanka
#Ranil wickremesinghe
#SouthKorea
#Workers
PriyaRam
2 years ago
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பு மூலம் தங்கள் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் தென் கொரிய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.