லண்டனில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி!
#London
#Music
Mayoorikka
2 years ago
பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் லண்டனில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த இசை நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி ARENA WEMBLEY இல் இடம்பெறவுள்ளது.
இந்த பிரமாண்டமான இசை நிகழ்சிக்கு லங்கா4 ஊடகம் இணை அனுசரனை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த இசை நிகழ்ச்சியானது தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஐரோப்பாவில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சியாகும்.
இந்த இசை நிகழ்ச்சியில் அவரால் இசையமைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களினை பாடிய பாடகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.