கொழும்பில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka #Colombo #children
Mayoorikka
2 years ago
கொழும்பில் உள்ள  சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கணிசமான அளவு உடல் எடை அதிகரிப்பது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தில் சிறுவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு 8 சதவீதமாக இருப்பதாக சுகாதார அமைச்சின் அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 சிறுவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு ஒரு பிரச்சினையாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெவிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது உடலில் ஆரோக்கியமற்ற எடையைக் கொண்ட ஒரு சிக்கலான கோளாறு ஆகும். இன்றைய காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளில் உடல் எடை அதிகரிப்பு ஒரு பெரிய பிரச்சினையாகிவிட்டது.

images/content-image/2023/11/1698998597.jpg

 இது தொடர்பில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா, எந்த வயதினருக்கும் உடல் எடை அதிகரிப்பது பிரச்சினையான விடயமாகும். ஆனால் குறிப்பாக சிறுவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களில் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். சிறுவர்களுக்கு இன்சுலின் குறைபாடு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்லிபிடெமியா, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய் மற்றும் இனப்பெருக்க செயலிழப்பு ஆகியவை ஏற்பட வழிவகுகின்றது.

 காபோகைதரேற் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணியாக இருப்பதால், கொழும்பில் பெரும்பாலும் மாப்பொருள் சார்ந்த உணவுகள் உட்கொள்வதால்தான் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

 நிலவும் பொருளாதார நெருக்கடியில் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை வாங்குவதில் சிரமம் உள்ளது. எனினும், மாப்பொருள் மிக அதிகளவில் அடங்கிய உணவுகளை நாம் குறைத்து அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!