யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் இந்திய மத்திய நிதி அமைச்சர்!
#India
#SriLanka
#Jaffna
PriyaRam
2 years ago
மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை வருகைதந்துள்ளார்.
இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
இவருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு வருகை தந்தது.

யாழ்ப்பாணம் கலாசார மையத்தை பார்வையிட்வுள்ளதோடு நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்லவுள்ளதுடன் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.
மேலும் யாழ். பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் அவர் திறந்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.