வடமாகாணத்தில் வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம்!

#SriLanka #NorthernProvince #Protest #strike #doctor
PriyaRam
2 years ago
வடமாகாணத்தில் வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம்!

வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது.

மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய தினம் இரண்டாம் நாளாக வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

பணிப்புறக்கணிப்பின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஊவா மாகாணத்தில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

images/content-image/2023/10/1698990770.jpg

நாட்டில் இருந்து வெளியேறும் வைத்தியர்களை தக்கவைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!