இந்த ஆண்டு நோய்த் தொற்றினால் 39 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Health
#Hospital
Mayoorikka
2 years ago
இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 68 ஆயிரத்து 174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அந்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 939 ஆக காணப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 527 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 14 ஆயிரத்து 34 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 04 ஆயிரத்து 378 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.