இஸ்ரேல் குறித்து இஸ்லாமிய நாடுகளுக்கு வலியுறுத்திய ஈரான் நாட்டின் உயர் தலைவர்

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 7ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிற நிலையில் காஸாவை மையமாக வைத்து ஹமாஸ் அமைப்பு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. உட்பட பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.



