அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனம்
#Attack
#UN
#Israel
#Refugee
#Camp
#Hamas
#Gaza
#condemn
Prasu
2 years ago
இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\
இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்தது மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிவிட்டுள்ளது.