வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம் நடத்திய சிங்களவர்கள்
சிங்கள பிரதேச செயலாளர் பிரிவும், தனி கமநல சேவைகள் திணைக்களமும், விவசாய செய்வதற்கு காணியும் கேட்டு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் சிங்களவர்கள் நேற்று போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் யார் இவர்கள் ?
இவர்கள் கொக்கச்சான்குளம் என்கிற பூர்விக தமிழ் கிராமத்தை 'போகஸ்வெவ' என சிங்கள பெயரிட்டு நாமல் ராஜபக்சே மேற்கொண்ட சிங்கள குடியேற்றத்தை சேர்ந்தவர்கள் ஆவர் அதாவது தமிழர்களுக்கு சொந்தமான பெரும்பண்ணைகளான டொலர் பாம், ஹென் பாம், தனிக்கல்லு, சிலோன் தியேட்டர், அரியகுண்டான் ஆகியவற்றை இணைத்து போகஸ்வெவ என்கிற பாரிய சிங்கள குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு இவர்கள் குடியேற்றப்பட்டு இருந்தார்கள் தமிழர்களுக்கு சொந்தமான இந்த பண்ணைகள் ஓவென்றும் 1000 ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்தன.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த குடியேற்ற திட்டத்திற்குள் பல சிங்கள உப கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமல்புர, கல்யாணபுர, கலாபோகஸ்வெவ போன்றவை சில உதாரணங்கள் மேற்படி சிங்கள குடியேற்றத்தில் அம்பிலிபிட்டிய, நுவரெலியா , பொலன்னறுவை, கொத்மலை, அவிசாவலை, கடவத்தை, அம்பாந்தோட்டை என பல பகுதிகளிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.
மேற்படி சிங்கள குடியேற்றவாசிகளுக்கு 1 ஏக்கர் பயிர்ச் செய்கைக்கான நிலமும், குடியிருக்க வீடும் விவசாயம் செய்வதற்கு மேலும் இரண்டு ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில் 2,600 குடும்பங்களுக்கு காணி உறுதியும் நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்டு இருந்தது தற்போது இந்த சிங்கள குடியேற்றவாசிகளுக்கான விவசாய உதவிகள் அனுராதபுரம் விவசாய திணைக்களம் தாராளமாக செய்கிறது. அதாவது இவ் குடியேற்றம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருப்பினும் நிவாரணம், அபிவிருத்தி திட்டங்கள் அனுராதபுரம் ஊடாகவே செய்யப்படுகின்றது.
இது போதாதென்று விவசாய வேலைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது வவுனியா வடக்கில் 2,300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு மேலதிக விவசாய காணிகள் வழங்கும் முயற்சிகளும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகின்றது

அந்தவகையில் இந்த நிலங்களை மகாவலி அபிவிருத்தி சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்கின்றார்கள் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்த வட்டாரத்தில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சிங்கள பிரதிநிதி ஒருவரும் வெற்றி பெற்று இருந்தார் தற்போது இவர்கள் தங்களுக்கு வவுனியாவில் தனி சிங்கள பிரதேச செயலாளர் பிரிவும், தனி கமநல சேவைகள் திணைக்களமும், மேலதிக விவசாய காணிகளும் கேட்டு போராட தொடங்கி இருக்கின்றார்கள்.
இந்த பாரிய ஆக்கிரமிப்புகளை அடையாளப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டிய மூத்த தமிழ் பத்திரிகையாளர் வித்தியாதரன் அவர்கள் தனது பத்திரிகையில் அத்து மீறிய சிங்கள குடியேற்றவாசிகளை 'மீள்குடியேறிவர்கள்' என அடையாளப்படுத்துகின்றார்
இது போதாதென்று அவர்கள் நீதி கோரி போராடுவதாகவும் செய்தியிடுகின்றார்