ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் இரத்து!

#SriLanka
PriyaRam
2 years ago
ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் இரத்து!

எஞ்சிய வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனங்களுக்கு மதுபான உற்பத்தி மற்றும் அதனை விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்தார்.

images/content-image/2023/10/1698924224.jpg

நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

ஐந்து மதுபான உற்பத்தி நிலையங்களில் மது உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், மதுபான உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் உள்ளதால் சந்தையில் மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!