ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 195 பேர் உயிரிழப்பு!

#SriLanka #world_news #Israel #War #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 195 பேர் உயிரிழப்பு!

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேறத் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் குறைந்தது 320 வெளிநாட்டு பிரஜைகள் உள்பட 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பல்கேரியா, செக் குடியரசு, பின்லாந்து, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் வெளியேற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  காசா எல்லை அதிகாரிகள்,  எல்லைக் கடப்பு வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படும், இதனால் அதிகமான வெளிநாட்டவர்கள் வெளியேற முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

அதிகாரிகளின் கூற்றுப்படி சுமார் 7500 பேர் வெளியேற்றத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!