மக்களுக்கு ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு வழங்கக் கூடாது!
#SriLanka
#Sri Lanka President
#Douglas Devananda
#Temple
Mayoorikka
2 years ago
மக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
மறவன்புலவு மேற்கு சிதம்பர சித்தி விநாயகர் ஆலயம், பரிபாலன சபையினரால் பூட்டப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.
குறித்த விவகாரத்தினை சுமூகமாக தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல் திங்கட்கிழமை (30) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, சம்மந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், ஒரு வார காலத்தினுள் ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடி பிரதேச மக்கள் விரும்பிய நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.