கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் பலி
#Death
#Accident
#world_news
#2023
#fire
#Died
#Kazakhstan
Mani
2 years ago
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில், எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு 250க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, தீ விபத்து குறித்து கஜகஸ்தான் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தீ விபத்துக்கு மீத்தேன் வாயு கசிவு தான் காரணம் என முதல்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து கஜகஸ்தானில் நேற்றைய தினம் தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.