சம்பள உயர்வு கோரி சாய்ந்தமருதுவில் போராட்டம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சம்பள உயர்வு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (30.10) முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பைக் கோரி சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"ஆக்காதே! ஆக்காதே! கடனாளி ஆக்காதே!", "எமது நியாயமான சம்பள உயர்வு கோரிக்கையினை ஏற்றுக்கொள்!", "அரசே, அரச ஊழியரின் சம்பளத்தை 20,000/- ஆல் உயர்த்து!", "வேண்டும் வேண்டும் சம்பள உயர்வு வேண்டும்" போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச உத்தியோகத்தர்களால் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு பூராவும் போராட்டங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
