அரசாங்கத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #Protest #government
PriyaRam
2 years ago
அரசாங்கத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளும் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1698666453.jpg

அரசாங்கம் உடனடியாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் எதிர்காலத்தில் பாரிய போராட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், பலமுறை அரசாங்கத்துடன், கலந்துரையாடல்கள் நடத்தியும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை. 

ம்முறை வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாகவேனும் தமக்கான போக்குவரத்து கொடுப்பனவு உட்பட ஏனைய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினமும் இந்த போராட்டம் தொடரும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!