பறிபோகிறதா பொன்சேகாவின் பதவி?

#SriLanka #Sajith Premadasa #Samagi Jana Balawegaya #Sarath Fonseka
PriyaRam
2 years ago
பறிபோகிறதா பொன்சேகாவின் பதவி?

சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படும் சரத் பொன்சேகாவிடம் பல உறுப்பினர்கள் பேச்சு நடத்திய போதும் அது பயனளிக்கவில்லை என அக்கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் தம்மைச் சந்தித்த கட்சி உறுப்பினர்களிடம் சரத் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/2023/10/1698657666.jpg

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்புபவர்கள் இவ்வாறான கதைகளை கூறி வருவதாகவும் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!