இன்று முதல் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சீன ஆய்வு கப்பல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6", நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30.10) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
“ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும, நாளையும் (31ஆம் திகதி) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த ஆராய்ச்சி தொடர்பாக, மேற்குக் கடலின் நீர் மாதிரிகள் கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணிகளில் நாரா நிறுவனத்தின் கடற்படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.