உரத்திற்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது அவசியம்!
விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
உர விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டதன் பின்னரே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நவீன விவசாய தொழில்நுட்ப செயலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சுப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.