சிங்கப்பூரில் கொரோனா பரவலுக்கு எதிரான புதிய தடுப்புசி அறிமுகம்
#Covid 19
#Covid Vaccine
#government
#Singapore
#Introduce
Prasu
2 years ago
சிங்கப்பூரில் கொரோனா நோய்ப்பரவலுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதார அமைச்சு அதுபற்றிய விவரங்களை வெளியிட்டது.
அதற்கமைய, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து புதிய தடுப்புமருந்து படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது BioNTech/Comirnaty, Moderna/Spikevax ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
COVID-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழுவின் ஆலோசனைப்படிப் புதிய மருந்து அறிமுகமாவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி நிபுணர் குழு பரிந்துரைக்கிறது.
குறிப்பாக மருத்துவரீதியாக அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள், சுகாதாரத்துறையில் வேலைபார்ப்பவர்கள் ஆகியோருக்கு அந்த ஆலோசனை பொருந்தும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.