அடுத்த ஆண்டு முதல் அறிமுகமாகும் புதிய வரி : இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து இந்த வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்