இலங்கை தமிழரசுக்கட்சிக்கு அணுகுமுறை மாற்றம் அவசியம் என்றால் தலைமை மாற்றமும் அவசியம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு அணுகுமுறை மாற்றம் அவசியம் என்றால் தலைமை மாற்றமும் அவசியம்!

அணுகுமுறை மாற்றம் அவசியமானால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தலைமை மாற்றம் தேவையாக உள்ளதென தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடமாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்களின் விடுதலைப் பயணித்தில் பங்கெடுத்து வருகின்ற அரசியல் தரப்புக்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மூத்த கட்சியாகவுள்ளது.  

இந்தக் கட்சியின் அண்மைக்கால அடைவு மட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களும், வாதப்பிரதிவாதங்களும், விமர்சனங்களும் காணப்படுகின்றன. அந்த வகையில் கட்சியை அடுத்து வரும் தலைமுறையினரின் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் அணுகுமுறை மாற்றம் அவசியமாக உள்ளது.  

எனவே, வெளிப்படைத்தன்மையுடன் கட்சியில் அணுகுமுறை மாற்றமொற்று ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் தலைமைத்துவ மாற்றம் அவசியமாகின்றது. இந்த தலைமைத்துவமாற்றம் என்பது வெறுமனே தலைவர் என்கிற தனிநபரை நோக்கிய விடயமாக கருதக்கூடாது.

 தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மேல்மட்ட நிர்வாகக் கட்டமைப்பிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன்மூலமாகவே தமிழரசுக்கட்சிக்கும், மக்களும் இடையில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிகளை குறைத்து மீண்டும் உத்வேகத்துடன் பயணத்தை முன்னெடுக்க முடியும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!