மஸ்கெலியாவில் காணாமல்போன 03 மாணவர்களும் மட்டகளப்பில் மீட்பு!
மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்தில் காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களும் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வேலை தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மஸ்கெலியா பொலிஸ் அதிகாரி ஒருவர், மஸ்கெலியா கவரவில வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய மூன்று மாணவர்கள் வீடுகளை விட்டு காணாமல் போயுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மஸ்கெலியா பொலிசார் மாணவர்களை தேடும் தேடுதல்களை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் மட்டக்களப்பு பிரதேசத்தில் காணப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த மூன்று மாணவர்களும் கடந்த 27ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வேலை தேடிச் சென்ற போது மாணவர்களை விசாரித்து மட்டகளப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த 03 மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.