கடற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ள சீன கப்பல் : நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்பு!

#SriLanka #China #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ள சீன கப்பல் : நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்பு!

இலங்கை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" மேற்கொள்ளும் ஆய்வுகளுக்காக அதன் ஆய்வுக் குழு இன்று (29.10) இணையவுள்ளதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் அல்லது நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஷி யான் 6” என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கு வந்தபோது, ​​விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில், அதன்பின்னர் வெளிவிவகார அமைச்சு விசாரணைக்கு இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தது. 

இதன்படி, நாளை (30.10) மற்றும் நாளை மறுதினம் (31.10) நாட்டின் கடற்பரப்பின் மேற்குப் பகுதியில் குறித்த கப்பலுடன் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பான விசாரணைகளில்  நாரா நிறுவனத்தின் நான்கு அதிகாரிகளும், இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த கப்பலானது  கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்து சோதனைகள் நடத்தவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  சோதனைகள் 2010 முதல் 2019 வரை தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. 

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!