புதுக் குடியிருப்பில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (28.10) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மயில்குஞ்சம், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்தவரின் தலையில் கோடரியால் அடித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபரும் காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பில் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.