நாட்டில்ஆபத்தான மேம்பாலங்கள் உள்ளன, ஆனால் புனரமைக்க நிதியில்லை - பந்துல குணவர்த்தன!

#SriLanka #Bandula Gunawardana #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டில்ஆபத்தான மேம்பாலங்கள் உள்ளன, ஆனால் புனரமைக்க நிதியில்லை - பந்துல குணவர்த்தன!

நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இருப்பினும் குறித்த மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், நாட்டில் போதுமான நிதி இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ரயில் நிலைய மேம்பாலத்திற்கான தற்காலிக படிக்கட்டுகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “குறித்த மேம்பாலங்களை புனரமைக்க  நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனக் கூறிய அவர் இதனை விட ஆபத்தான பாலங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலம் ஆபத்தானது எனவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இதனை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டின் உண்மைகளை ஊடகங்களே வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!