அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இன்று விசேட அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#srilankan politics
#Politician
Mayoorikka
2 years ago
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இன்று விசேட அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற “ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்தார்.
பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயகத்தில் தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகளைப் பேணி புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.