மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும்!

#SriLanka #International #Human Rights #Human activities
Mayoorikka
2 years ago
மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும்!

பொறுப்புக்கூறலின்மை, சிவில் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகள், பொதுமக்களின் உரிமைகளில் மட்டுமீறிய தலையீடுகள், மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என சிவில் சமூகப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பு சீர்குலைவடைந்திருப்பதாகவும், இதனை அடித்தளமாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைமையில் சர்வோதயம் அமைப்பு, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், வெரிட்டே ரிசேர்ச், பெப்ரல் மற்றும் தேசிய சமாதானப்பேரவை ஆகிய சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பினால் இலங்கையின் ஆட்சியியல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அதன்மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் ஆட்சியியல் போக்கை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய ஆய்வறிக்கையொன்று கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது.

 அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கிலான சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இக்கலந்துரையாடலில் கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலின்போது நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதை முன்னிறுத்தி சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

 அதேபோன்று தற்போது நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பு சீர்குலைவடைந்திருப்பதாகவும், இதனை அடித்தளமாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், எனவே நாட்டின் சட்ட ஆட்சி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள், நிர்வாகக்கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் சீரமைக்கப்படவேண்டியது அவசியமென வலியுறுத்தினர்.

 மேலும் பொறுப்புக்கூறலின்மை, ஊடக சுதந்திரத்தின் மீதான மட்டுப்பாடுகள், சிவில் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகள், பொதுமக்களின் உரிமைகளில் மட்டுமீறிய தலையீடுகள், மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் என்பன பற்றியும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!