எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் மீனவர்கள் சமூகம் பாதிப்பு : இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து வெளியான அறிவிப்பு!
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சேதத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு இழப்பீடு வழங்குமாறு கோரியும் மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திருத்துவதற்கு கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
குறித்த கப்பலினால் சுற்றாடல் மற்றும் அனைத்து தொழில் துறைகளுக்கும் ஏற்பட்ட சேதம் 6.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தமது தொழிலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி மீனவ சமூகம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.