'ஹமூன்' சூறாவளியால் வங்காளதேசத்தில் கனமழை 3 பேர் உயிரிழப்பு 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
#India
#Death
#Rain
#HeavyRain
#2023
#Died
#Ocean
#Cyclone
#West
Mani
2 years ago
வங்கக்கடலில் உருவான 'ஹமூன்' சூறாவளி, நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கதேசத்தின் கடற்கரை பகுதியில் சுமார் 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. இதனால் வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது, இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ரோஹிங்கியா அகதிகள் முகாம் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தது, சாலைகள் தடைப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.