காலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி மாவட்டம், யக்கலமுல்லை பிரதேசத்தில் நேற்று (25.10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய எம்.நவரத்ன என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

அவரின் வீட்டுக்கு ஓட்டோ ஒன்றில் வந்த இனந்தெரியாத இரண்டு நபர்கள், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

 சம்பவத்தில் படுகாயமடைந்த நவரத்ன, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

உயிரிழந்த நபர், பாதாளக் குழுவினருடன் தொடர்புபட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!