அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமரின் மகன்: கிளம்பும் எதிர்ப்புகள்
#America
#world_news
#Israel
#War
Mayoorikka
2 years ago
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக போரிடுவதற்காக உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலுக்கு படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இருந்தும், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 32 வயது மகன் யாரி இன்னும் அமெரிக்காவில் இருப்பதால், அவர் தற்போது குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
போர் முனைக்கு சென்ற இஸ்ரேலிய இளைஞர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது சொந்த வீட்டில் யாரி வசித்து வருகின்றமை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.