இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்த பாப்பரசர்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தொடரும் நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், காசா பகுதியில் மேலும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரோமில் இடம்பெற்ற பிராத்தனையில் பின்னர் பாப்பரசர் பிரான்சிஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து இஸ்ரேல் தண்ணீர், உணவு மற்றும் மின்சார விநியோகத்தினை நிறுத்தியுள்ளதால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காசா பகுதிக்கு முதலாவது மனிதாபிமான உதவி நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2.4 மில்லியன் மக்களுக்கு 20 கொள்கலன்கள் மூலம் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் போதுமானதாக இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



