பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி கந்தானை, பொல்பிதிமூகலான பிரதேசத்தில் வீடொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரை தேடி பொலிஸார் நேற்று திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகநபர் இருந்த இடத்திற்கு பொலிஸார் சென்றபோது, சந்தேக நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர், பொலிஸ் அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சந்தேக நபர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த சந்தேக நபர் அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று, அவிசாவளை, மணியங்கமவுக்கு சந்தேகநபர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சுவையால் கழுத்தை நெரிக்க அவிசாவளை பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் குறித்த சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.