இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (16) தெரிவித்தார்.
அரசாங்கம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் Q.R. இந்த முறையை மீளக் கொண்டுவருவது தொடர்பில் இதுவரை எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என அரசாங்கம் கருதி, எரிபொருள் நுகர்வை மட்டுப்படுத்த, தேசிய எரிபொருள் உரிமம் அல்லது கியூ.ஆர். முறைமையை கொண்டுவரஉள்ளதாக சில சமூக ஊடகங்கள் பதிவிட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் காஞ்சன விஜய சேகர இவ்வாறு கூறியுள்ளார்.