கலஹிட்டிய பாலத்திற்கு அருகில் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது: அங்கொடைபெண்ணின் தலையா?
வெள்ள நிலைமையை அவதானிக்கச் சென்ற சபுகஸ்கந்த குற்றப் பிரிவு நிலையத் தளபதியால் இறந்த நபரின் சந்தேகத்திற்குரிய மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (15ம் திகதி) காலை 10.30 மணியளவில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியாம்பலாபேஇ கலஹிடியாவ பாலத்தை அண்மித்த பகுதிக்கு சென்ற எஸ்.எல். முத்துக்குமாரன என்ற அதிகாரியால் இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அங்கொடையில் கொல்லப்பட்ட பெண்ணின் தலை மண்டை ஓடுதானா என கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹர மாஜிஸ்திரேட் வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதன் பின்னர்இ மண்டை ஓடு பெண்ணின் தலையா என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
பெண்ணை கொலை செய்த சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்ததையடுத்துஇ இந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடும் மழை காரணமாக தலை காணப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.