ஆறு அரச வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டம்

#SriLanka #Bank of Ceylon #Central Bank
Prathees
2 years ago
ஆறு அரச வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டம்

ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

 இத்திட்டத்தின் முதற்கட்டமாக அரச  வங்கி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார். 

 இதன்படி, தற்போதைய அரச  வங்கிச் சட்டம் நீக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இந்த ஆறு வங்கிகளில் உலகின் முப்பது பெரிய அரச வங்கிகளில் இரண்டு வங்கிகளும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

 அரச வங்கிகள் இலாப நோக்குடன் நிறுவப்படவில்லை என்றும், தொலைதூர கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவப்பட்டது என்றும் அவர் கூறினார். 

 இந்த விடயத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து பாரிய தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!