தற்போது நிலவும் ஆபத்தான நோய்: குழந்தைகள் தொடர்பில் வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்
தற்போது நிலவும் மழை நிலைமையினால் நீர் தேங்கிய பிரதேசங்களில் சிறுவர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குறிப்பாக குழந்தைகள் வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர் கூறியதாவது:
தற்போது பெய்து வரும் மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு சுத்தமான உணவு கிடைக்காத நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் ஈக்கள் அதிகமாக உள்ளன.
எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான உணவு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ளது. எனவே, பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.